Lilypie

Lilypie

Wednesday, December 23, 2009

மொட்டிலி விட தெரியுமா?

இன்னிக்கு தான் எங்க ஹாஃபேர்லி ஹாலிடேஸ் ஸ்டார்ட் ஆகுது! இன்னிக்கு நான் ரெண்டு விஷயம் பழகினேன். ஒன்னு பபுள்கம்முல மொட்டிலி விடறது, இன்னொன்னு செஸ் விளையாடுறது!

எனக்கு ரொம்ப நாளா மொட்டிலி விடணும்னு ஆசை... ஆனா, பபுள்கம்மை கையில எடுத்து ஒதட்டுக்கு மேல ஒட்ட வெச்சு ட்ரை பண்ணி பார்ப்பேன். சில சமயம் சட்டையில் ஒட்டிக்கிட்டு மம்மிகிட்ட திட்டு வாங்குவேன். ஆனா, இன்னிக்கு நா எங்க டாடி கூட வெளிய போனப்ப, பபுள்கம் வாங்கினேன். எப்படியோ மொட்டிலி விட்டுட்டேன். எப்படி தெரியுமா? நல்லா மென்னு மென்னு நாக்குல அத உந்தி கொஞ்சம் அகலமாக்கி, பல்லுல லேசா பதிய வெச்சு ஃபூனு ஊதினேன். மொட்டிலி வந்திருச்சு. எனக்கு குஷியாயிருச்சு! உடனே மம்மிக்கு போன் செஞ்சு ‘மம்மி மொட்டிலி விட பழகிட்டேன்’னு  சொன்னேன். இதுக்கு ஒரு ஃபோனா? வீட்டுக்கு வந்தொன்ன சொல்ல் வேண்டியது தானன்னு மம்மி சொல்லறாங்க! என்னோட சந்தோஷம் எனக்குத் தான தெரியும்???

அப்புறம், எனக்கு ரொம்ப நாளா செஸ் விளையாட ஆசை! மொதல்ல வாங்கின செஸ் காயினெல்லாம் தொலைஞ்சு போச்சு... அப்ப நா கேரம் போர்டு செஸ் தான் விளையாடுவேன். அப்படீனா... செஸ் காயின அடுக்கி, ராஜாவால கேரம் மாதிரி சுண்டி விடுவேன். கருப்பு காய் எத்துணை கீழே விழுதோ, அத்துணை பாயிண்ட் நம்மளுக்கு! எனக்கு நாலு வயசு இருக்கும் போது, செஸ் விளையாடறேனு சொன்னப்ப,  மம்மி தான் எனக்கு இதச் சொல்லி கொடுத்துச்சு!

இப்ப நாங்க பெரிய பையனாயிட்டம்ல....! அதான் ஒரிஜினல் செஸ் விளையாடலாம்னு பார்த்தா, காயினெல்லாம் தொலஞ்சு போச்சு! அப்புறம் எங்க முத்து மாமா பத்து நாள் முன்னாடி மலேசியா போறப்ப, எனக்கு அதோட காயின கொடுத்துச்சு! ஒரு வழியா அட்டையை தேடி எடுத்து, டாடிக்கிட்ட கத்துக்கிட்டேன். எனக்கு ஹார்ஸ் தான் ரொம்ப பிடிச்சது... ஏனா, அது தான் ஒரு ஸ்டெப், ஒரு கிராஸ் போகுது! குறுக்க எது இருந்தாலும், தாண்டி தாண்டி போயிருது!

எப்படியோ, ஒரு வழியா கத்துக்கிட்டேன். ஆனாலும் அப்பப்ப குழப்பமா இருக்கு! சில சமயம் மம்மி என்னோட டவுட்ட கிளியர் பண்ணுவாங்க... சில சமயம் ‘போடா சும்மா நச்சாத... எனக்கு வேலை இருக்குது’னு சொல்லிடுவாங்க! ஆனா... எனக்கு தெரிஞ்ச அளவுக்குக் கூட எங்க ஆப்க்காக்கு தெரியல. ஈஸியா வெட்டற மாதிரி இருந்தாக்கூட வெட்ட தெரியல...அதாச்சியும் பரவாயில்லை....ஒரு சோல்ஜரை வெட்டறதுக்காக தன்னோட ரூக்க பலி கொடுக்குது! இது தப்பு தான???

-லாமின்.

5 comments:

நட்புடன் ஜமால் said...

ஹை அடுத்த ஆனந்த் ரெடியாய்கிட்டு வாறார்.

Unknown said...

nall thalivana pathivu nall vallthugal lamin

கலையரசன் said...

//சோல்ஜரை வெட்டறதுக்காக தன்னோட ரூக்க பலி கொடுக்குது! இது தப்பு தான???//
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....

அதுயாருங்க புரோப்பைல் போட்டோவுல??
நீங்களா????
நீங்களா????
நீங்களா????

Lafira / Lamin said...

அங்கிள், இது என்னோட அப்புறம் எங்க அக்காவோட ரெண்டு பேருக்கும் பொதுவான ப்ளாக். எனக்கு டைப் பண்ணத் தெரியாதுல்ல...அதனால அக்கா இல்லாட்டி மம்மி தான் எனக்காக டைப் பண்ணுவாங்க! ஆனா... நான் சொல்றதத்தான் டைப் பண்ணுவாங்க! இதுல எங்க அக்காவும் எழுதுவா. யார் எழுதறமோ, அவங்க கீழ பேர் போட்டுக்குவோம்.

ப்ரொஃபைல் போட்டோவுல இருக்கறது, எங்க அக்கா. அது, அவ ஒரு வைஸ்ல எடுத்த போட்டோ. மேல டெம்ப்ளேட்ல இருக்கறதும், எங்க அக்கா தான்! கீழ இருக்கற கலர் கலர் தம்பி தான் நானு! இந்த டெம்ப்ளேட் மம்மி எங்களுக்காக ஸ்பெஷலா செஞ்சு குடுத்தாங்க!

Jaleela Kamal said...

லாமின் எப்படியோ லீவ ஜாலியா கழிச்சாச்சு


இரண்டு விஷியம் தெரிந்து கொண்டாச்சு,
என் பையன் ஹனீபும் ரொம்ப சுட்டி லீவில் செஸ் தான் விளையாடினான்.

Post a Comment

தமிழில் டைப் பண்ண, தங்கிலிஷில் அடியுங்க!