எங்க மம்மி பிறந்த நாளுக்கு நாங்க எழுதிய கவிதை:
பிறந்த நாள் வாழ்த்துகளை பாடுகிறோம்
வாழ்வெல்லாம் நலமாக வாழ்ந்திடுங்கள்!
ஒவ்வொரு வரிகளுமே பாடுகிறோம்
அன்பான கனிவான மொழிகளிலே!!
உங்கள் இதழ் பேசும் வார்த்தைகள்
காதில் சுகமாய் ஒலிக்கிறது
அவை ஒவ்வொன்றும் கவிதைகளாய்
மனதிற்குள் இனிக்கிறது!!
முழு நிலவை போல் உங்கள் முகம்
அதை தினம் காண்பது சுகம் சுகம்!
எல்லா செயலிலும் என்றும் வேகம்
தீராது உங்கள் கலை தாகம்!!
- லாஃபிரா லாமின்
Monday, December 28, 2009
Wednesday, December 23, 2009
மொட்டிலி விட தெரியுமா?
இன்னிக்கு தான் எங்க ஹாஃபேர்லி ஹாலிடேஸ் ஸ்டார்ட் ஆகுது! இன்னிக்கு நான் ரெண்டு விஷயம் பழகினேன். ஒன்னு பபுள்கம்முல மொட்டிலி விடறது, இன்னொன்னு செஸ் விளையாடுறது!
எனக்கு ரொம்ப நாளா மொட்டிலி விடணும்னு ஆசை... ஆனா, பபுள்கம்மை கையில எடுத்து ஒதட்டுக்கு மேல ஒட்ட வெச்சு ட்ரை பண்ணி பார்ப்பேன். சில சமயம் சட்டையில் ஒட்டிக்கிட்டு மம்மிகிட்ட திட்டு வாங்குவேன். ஆனா, இன்னிக்கு நா எங்க டாடி கூட வெளிய போனப்ப, பபுள்கம் வாங்கினேன். எப்படியோ மொட்டிலி விட்டுட்டேன். எப்படி தெரியுமா? நல்லா மென்னு மென்னு நாக்குல அத உந்தி கொஞ்சம் அகலமாக்கி, பல்லுல லேசா பதிய வெச்சு ஃபூனு ஊதினேன். மொட்டிலி வந்திருச்சு. எனக்கு குஷியாயிருச்சு! உடனே மம்மிக்கு போன் செஞ்சு ‘மம்மி மொட்டிலி விட பழகிட்டேன்’னு சொன்னேன். இதுக்கு ஒரு ஃபோனா? வீட்டுக்கு வந்தொன்ன சொல்ல் வேண்டியது தானன்னு மம்மி சொல்லறாங்க! என்னோட சந்தோஷம் எனக்குத் தான தெரியும்???
அப்புறம், எனக்கு ரொம்ப நாளா செஸ் விளையாட ஆசை! மொதல்ல வாங்கின செஸ் காயினெல்லாம் தொலைஞ்சு போச்சு... அப்ப நா கேரம் போர்டு செஸ் தான் விளையாடுவேன். அப்படீனா... செஸ் காயின அடுக்கி, ராஜாவால கேரம் மாதிரி சுண்டி விடுவேன். கருப்பு காய் எத்துணை கீழே விழுதோ, அத்துணை பாயிண்ட் நம்மளுக்கு! எனக்கு நாலு வயசு இருக்கும் போது, செஸ் விளையாடறேனு சொன்னப்ப, மம்மி தான் எனக்கு இதச் சொல்லி கொடுத்துச்சு!
இப்ப நாங்க பெரிய பையனாயிட்டம்ல....! அதான் ஒரிஜினல் செஸ் விளையாடலாம்னு பார்த்தா, காயினெல்லாம் தொலஞ்சு போச்சு! அப்புறம் எங்க முத்து மாமா பத்து நாள் முன்னாடி மலேசியா போறப்ப, எனக்கு அதோட காயின கொடுத்துச்சு! ஒரு வழியா அட்டையை தேடி எடுத்து, டாடிக்கிட்ட கத்துக்கிட்டேன். எனக்கு ஹார்ஸ் தான் ரொம்ப பிடிச்சது... ஏனா, அது தான் ஒரு ஸ்டெப், ஒரு கிராஸ் போகுது! குறுக்க எது இருந்தாலும், தாண்டி தாண்டி போயிருது!
எப்படியோ, ஒரு வழியா கத்துக்கிட்டேன். ஆனாலும் அப்பப்ப குழப்பமா இருக்கு! சில சமயம் மம்மி என்னோட டவுட்ட கிளியர் பண்ணுவாங்க... சில சமயம் ‘போடா சும்மா நச்சாத... எனக்கு வேலை இருக்குது’னு சொல்லிடுவாங்க! ஆனா... எனக்கு தெரிஞ்ச அளவுக்குக் கூட எங்க ஆப்க்காக்கு தெரியல. ஈஸியா வெட்டற மாதிரி இருந்தாக்கூட வெட்ட தெரியல...அதாச்சியும் பரவாயில்லை....ஒரு சோல்ஜரை வெட்டறதுக்காக தன்னோட ரூக்க பலி கொடுக்குது! இது தப்பு தான???
-லாமின்.

Tuesday, December 22, 2009
ஈரோடு பதிவர் சந்திப்பு படங்கள்
அங்கிள்ஸ் & ஆண்ட்டீஸ் எல்லாரும் பதிவர் சங்கமத்தைப் பற்றி என்ன என்னவெல்லாமோ எழுதினாங்க....ஆனா, அங்க லாமின்னு ஒரு குட்டிப் பையன் சுத்தி சுத்தி வந்து எல்லாரையும் போட்டோ எடுத்தானே அத யாராவது எழுதினாங்களா?
அது கூட பரவாயில்லை... ஈரோட்டுக்காரங்களுக்கு புதுசா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு இருக்காங்கல்ல...அந்த ப்ளாக்லயாவது என்னோட ப்ளாக சேர்த்தாங்களா??? ம்...ஹூம்.... நானும் ஈரோடு தானு ஏன் இவங்களுக்கு புரிய மாட்டேங்குது? பொடிப்பையன்னு தான விட்டுட்டீங்க! நான் எவ்வளவு பெரிய ஆள்னு புரிய வைக்கணும்னு தான் விழாவுல நான் எடுத்த எல்லா போட்டோஸையும் இங்க போடறேன்.
விழாவுக்கு வந்திருந்த அங்கிள்ஸ் எல்லாரும், நான் போட்டோ எடுத்திட்டு இருந்ததைப் பார்த்திருப்பீங்க! அவங்கவங்க மூஞ்சிய நல்லா எடுத்திருக்கேனானு பாருங்க! யாரையாச்சும் கவர் பண்ணலைனா ஃபீல் பண்ணாதிங்க! அடுத்தவாட்டி குளோசப்லயே எடுத்திடுறேன்!!

Sunday, December 20, 2009
எனக்கும் ப்ளாக் இருக்குல்ல...
மம்மி ப்ளாகர்ஸ் மீட்டுக்கு போயிட்டாங்க. எனக்கும் ப்ளாக் இருக்குல்ல...நானும் வருவேன்னு அடம் பிடிச்சு டாடிகிட்ட சொல்லி கூட்டிட்டு போகச்சொன்னேன்.
எல்லாரும் சிரிச்சுக்கிட்டே இருந்தாங்க. எனக்கு ரொம்ப குஷியா இருந்திச்சு. சுத்தி சுத்தி வந்து எல்லாரையும் போட்டோ எடுத்தேன். ஒவ்வொரு அங்கிளா குளோசப்ல எடுத்தேன்.
எல்லாரும், அவங்க அவங்க ப்ளாக் பேரை சொன்னாங்க. நானும் மைக் வாங்கி, என் பேரையும், என்னோட ப்ளாக் பேரையும் சொன்னேன்.
பெரிசா ஒரு பேனர் ஒட்டி வெச்சிருந்தாங்க. ஒரு அங்கிள் அதை போட்டோ எடுக்க சொன்னார். நான் முதல்லயே அதை அழகா போட்டோ எடுத்திட்டேன். அதை அந்த அங்கிள் கிட்ட காட்டினேன்.
ஒரு அங்கிள் மட்டும் கலர் கலரா சட்டை போட்டுக்கிட்டு எல்லார்கிட்டயும் கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தார். நான் அவரை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.
என்னென்னமோ பேசுனாங்க. எனக்கு பாதி புரியவே இல்லை. அனானி அங்கிளைத் தான் எல்லாரும் திட்டினாங்க. யாருன்னே தெரியல. பாவம் அந்த அங்கிள்.
எல்லாரும் சாப்பிட போனாங்க. எனக்கு பிடிச்ச பூரி அங்க இல்லவே இல்ல. பூரி தான் வேணும்னு நான் அடம் பிடிச்சேன். ‘டேய் இது ஹோட்டல் இல்லடா’னு மம்மி திட்டினாங்க.
எதுவுமே சாப்பிடலை. பாயாசம் குடிக்கிறயானு மம்மி கேட்டாங்க. முந்திரி போட்டதுன்னா குடிக்கிறேனு சொன்னேன். குடுத்தாங்க. நல்லா இருந்துச்சு. பாயாசம் மட்டும் ரெண்டு டம்ளர் குடித்தேன். ரொம்ப சூடா இருந்திச்சு. டாடி ஆற வெச்சு குடுத்தாங்க. அப்புறம் ஒரு பழம் சாப்பிட்டேன். என்னுடைய பீடாவை, பாவம் அக்கானு அக்காக்கு கொண்டு வந்து தந்திட்டேன்.
கதிர் அங்கிளோட குட்டி பொண்ணு ஒன்னு வந்திருந்துச்சு. அத என்னோட கேர்ள் ப்ரெண்ட் ஆக்கிக்கலாம்னு பார்த்தேன். என்கிட்ட சரியா பேசவே இல்லை.
எல்லாரும் மம்மிகிட்ட தான் பேசுறாங்க. என்கிட்ட யாருமே சரியா பேசல. என்னோட ப்ளாக் பத்தியும் கேட்கல. அடுத்தவாட்டி, வருவீங்கல்ல....அப்ப பேசிக்கிறேன்!

Subscribe to:
Posts (Atom)