Lilypie

Lilypie

Sunday, December 20, 2009

எனக்கும் ப்ளாக் இருக்குல்ல...

மம்மி ப்ளாகர்ஸ் மீட்டுக்கு போயிட்டாங்க. எனக்கும் ப்ளாக் இருக்குல்ல...நானும் வருவேன்னு அடம் பிடிச்சு டாடிகிட்ட சொல்லி கூட்டிட்டு போகச்சொன்னேன்.

எல்லாரும் சிரிச்சுக்கிட்டே இருந்தாங்க. எனக்கு ரொம்ப குஷியா இருந்திச்சு. சுத்தி சுத்தி வந்து எல்லாரையும் போட்டோ எடுத்தேன். ஒவ்வொரு அங்கிளா குளோசப்ல எடுத்தேன்.

எல்லாரும், அவங்க அவங்க ப்ளாக் பேரை சொன்னாங்க. நானும் மைக் வாங்கி, என் பேரையும், என்னோட ப்ளாக் பேரையும் சொன்னேன்.

பெரிசா ஒரு பேனர் ஒட்டி வெச்சிருந்தாங்க. ஒரு அங்கிள் அதை போட்டோ எடுக்க சொன்னார். நான் முதல்லயே அதை அழகா போட்டோ எடுத்திட்டேன். அதை அந்த அங்கிள் கிட்ட காட்டினேன்.

ஒரு அங்கிள் மட்டும் கலர் கலரா சட்டை போட்டுக்கிட்டு எல்லார்கிட்டயும் கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தார். நான் அவரை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

என்னென்னமோ பேசுனாங்க. எனக்கு பாதி புரியவே இல்லை. அனானி அங்கிளைத் தான் எல்லாரும் திட்டினாங்க. யாருன்னே தெரியல. பாவம் அந்த அங்கிள்.

எல்லாரும் சாப்பிட போனாங்க. எனக்கு பிடிச்ச பூரி அங்க இல்லவே இல்ல. பூரி தான் வேணும்னு நான் அடம் பிடிச்சேன். ‘டேய் இது ஹோட்டல் இல்லடா’னு மம்மி திட்டினாங்க.

எதுவுமே சாப்பிடலை. பாயாசம் குடிக்கிறயானு மம்மி கேட்டாங்க. முந்திரி போட்டதுன்னா குடிக்கிறேனு சொன்னேன். குடுத்தாங்க. நல்லா இருந்துச்சு. பாயாசம் மட்டும் ரெண்டு டம்ளர் குடித்தேன். ரொம்ப சூடா இருந்திச்சு. டாடி ஆற வெச்சு குடுத்தாங்க. அப்புறம் ஒரு பழம் சாப்பிட்டேன். என்னுடைய பீடாவை, பாவம் அக்கானு அக்காக்கு கொண்டு வந்து தந்திட்டேன்.

கதிர் அங்கிளோட குட்டி பொண்ணு ஒன்னு வந்திருந்துச்சு. அத என்னோட கேர்ள் ப்ரெண்ட் ஆக்கிக்கலாம்னு பார்த்தேன். என்கிட்ட சரியா பேசவே இல்லை.

எல்லாரும் மம்மிகிட்ட தான் பேசுறாங்க. என்கிட்ட யாருமே சரியா பேசல. என்னோட ப்ளாக் பத்தியும் கேட்கல. அடுத்தவாட்டி, வருவீங்கல்ல....அப்ப பேசிக்கிறேன்!

-லாமின்.

20 comments:

அண்ணாமலையான் said...

கதிர் அங்கிளோட குட்டி பொண்ணு ஒன்னு வந்திருந்துச்சு. அத என்னோட கேர்ள் ப்ரெண்ட் ஆக்கிக்கலாம்னு பார்த்தேன். என்கிட்ட சரியா பேசவே இல்லை.” ம்ம் நடக்கட்டும்...

துபாய் ராஜா said...

லாமின் தம்பி,ஈரோடு சந்திப்பு முடிந்தவுடன் முதல் பதிவிட்டது நீங்களாத்தான் இருக்கும். ஆமா, நீங்க எடுத்த போட்டோவெல்லாம் எங்கே... கதிர் அங்கிள் பொண்ணு போட்டோ பத்திரம்.... :))

ஸ்ரீ.கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் லாமின் சூப்பெர்

சீமான்கனி said...

//எல்லாரும் மம்மிகிட்ட தான் பேசுறாங்க. என்கிட்ட யாருமே சரியா பேசல. என்னோட ப்ளாக் பத்தியும் கேட்கல. அடுத்தவாட்டி, வருவீங்கல்ல....அப்ப பேசிக்கிறேன்!//

பாவம் எல்லாம் சின்ன புள்ளைங்க இந்த தடவை விட்டுரலாம்....o.k...

வாழ்த்துகள் குட்டி பதிவர் லாமின் ...

சீமான்கனி said...

//கதிர் அங்கிளோட குட்டி பொண்ணு ஒன்னு வந்திருந்துச்சு. அத என்னோட கேர்ள் ப்ரெண்ட் ஆக்கிக்கலாம்னு பார்த்தேன். என்கிட்ட சரியா பேசவே இல்லை.//

நீஉம் ஒரு குட்டி பர்தா போட்டு போயிருந்தா ப்ரெண்ட் ஆக்கி இருக்கலாம்...சரி விடு நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம்...

நட்புடன் ஜமால் said...

அருமை லாமின்.

நான் வந்திருந்தா உன் கிட்டே நிறைய பேச்சு கேட்டுருப்பேன் - சரி சரி இன்னும் சந்தர்ப்பத்தில் :)

Unknown said...

பீல் பண்ணாதிங்க விடுங்க...,

passerby said...

Lamin!

Well done!

You have written nicely.

Try to write an English blog.

I like English. I will be your regular reader.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் தம்பி லாமின் அவர்களே.

ஆங்கிலத்திலும் ஒரு வலைபதிவு எழுதுங்கள். நான் கண்டிப்பாக படிப்பேன். எனக்கு ஆங்கிலம் பிடிக்கும்.

ஆங்கிலத்தில் எழுதி பழகினால், பள்ளிப்படிப்புக்கு உறுதுணையாக இருக்கும்.

பதிவர் சந்திப்பைப் பற்றி உங்கம்மா எழுதிய பதிவு நன்றாகயிருக்கிறது. அதைவிட எனக்குப் பிடித்தது உங்கள் அனுபவம்.

பூரி கண்டிப்பாக இருக்கவேண்டும் பார்ட்டிகளில். அவர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.

அவர்களுக்கு நான் எழுதுகிறேன். பதிவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வருவார்கள் என அவர்கள் எதிர்பார்த்திருக்க்வேண்டும்.

மறு பதிவில் லாமின் தம்பி அவர்களை சந்திப்பேன்.

Have a nice day.

Jaleela Kamal said...

லாமின் குட்டி நீங்க தான் எல்லோரையும் போட்டோ எடுத்து கொண்டு இருந்தீஙக்ளே. எடுக்க போய் தான் உங்க மம்மி பிலாக்கில் நாங்கள் எல்லாம் பார்க்க முடிந்தது.

பதிவர் மீட்டிங் போய் வந்ததை சூப்பரா போட்டு இருக்கீஙக் வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

அடுத்த சங்மத்தில் பூரி போட்டுடலாம்

உங்களைக் கண்டுக்காம விட்டது தப்புதான்

ஷாகுல் said...

//எனக்கு பிடிச்ச பூரி அங்க இல்லவே இல்ல//

same sweet.

//கதிர் அங்கிளோட குட்டி பொண்ணு ஒன்னு வந்திருந்துச்சு. அத என்னோட கேர்ள் ப்ரெண்ட் ஆக்கிக்கலாம்னு பார்த்தேன். என்கிட்ட சரியா பேசவே இல்லை.//

Don't worry brother try hard.

this articale really super Hats off Lamin

S.A. நவாஸுதீன் said...

மாஷா அல்லாஹ். ஈரோடு பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளில் மிகச்சிறந்த பதிவு இதுதான்.

க.பாலாசி said...

//எல்லாரும் மம்மிகிட்ட தான் பேசுறாங்க. என்கிட்ட யாருமே சரியா பேசல. என்னோட ப்ளாக் பத்தியும் கேட்கல. அடுத்தவாட்டி, வருவீங்கல்ல....அப்ப பேசிக்கிறேன்!//

தம்பி...நீ...அவ்ளோ பெரிய ஆளாப்பா...பேசாம விட்டுட்டோமே...நெக்ஸ்ட் மீட் பண்ணலாம்...

கண்மணி/kanmani said...

வெல்டன் குட்டிப் பையா [சாரி வாலிபனோ:))கேர்ள் பிரண்ட் கேக்கறீங்களே]நிறைய விஷயம் எழுதுங்க லீவ்ல மட்டும்.மத்த நேரம் நல்லாப் படிக்கனும்.
நானும் உன்னை மாதிரி குட்டீஸுக்காக பிலாப் வச்சிருக்கேனே

கண்மணி/kanmani said...

நானும் உன்னை மாதிரி குட்டீஸுக்காக பிலாப் வச்சிருக்கேனே

பிலாக் னு வரணும்.சாரி

எம்.எம்.அப்துல்லா said...

சாரி லாமின். நிறைய அங்கிள்களை நானும் அன்றைக்குத்தான் பார்த்தேன். அதனால் உன்னிடம் ரொம்பப் பேசமுடியவில்லை. அடுத்தமுறை கண்டிப்பா நிறைய பேசுறேன்.ஒ.கே

:)

RAMYA said...

வெல்டன் லாமின். துறுவென்று நீ சுற்றி வந்தது இன்னும் என் கண்களில் இருந்து அகலவே இல்லை. அருமையா படம் எடுத்திருக்கிறாய். இந்த முறை உன்னுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த முறை உன்னுடன் கண்டிப்பாக பேசுவேன்.

cheena (சீனா) said...

அன்பின் லாமின்

அருமையான இடுகை - குட்டிப்பையன் சுட்டியாக எழுதிய இடுகை. நல்லாருக்கு

நிறைய எழுது - நிறையப் படி - பள்ளிக்கூடத்துலேயும் படி - பிளாக்லேயே நேரம் செலவழிக்காதே - அப்பா அம்மா சொலற பேச்சக் கேட்டு பெரிய ஆளா வரணும் - என்ன சரியா

நல்வாழ்த்துகள் லாமின்

asiya omar said...

great work.well done.

Anonymous said...

wav ..super...
ennai vida kutti pillaiyaa neenga...superaa eluthi irukkinga...

lamin dont feel ...kuttis pathivaalargal onnak kuduroom.., meeting nadathurom..puri saapudurom..
ella uncles aunties ponngalai ,pasangalai ellam invite pannurom...okey

Post a Comment

தமிழில் டைப் பண்ண, தங்கிலிஷில் அடியுங்க!