Lilypie

Lilypie

Friday, September 4, 2009

முருங்கைகாய் கதை

எங்க வீட்டு தோட்டத்தில், வைத்த முருங்கைமரம், இப்போ தான் முதல் தடவையா காய்க்கிறது. என் தம்பி லாமின் எல்லாத்தையும் ஆசையா பிய்ப்பான். எட்டாத காயை, எங்க டாடி அவனை தூக்கி பிடிப்பார், பிய்த்து விடுவான்.

அன்னிக்கு ஒரு நாள், பிச்சிட்டு இருக்கப்ப, ‘டேய் பார்த்து பூவையும் சேர்த்து பிச்சிடாதே’ என்றார் டாடி!

அதுக்கு அவன், ‘ஏன் டாடி, பிச்சா ஒரு முருங்கைகாய் லாஸ் ஆயிறுமா?’ என்று கேட்டான். நாங்கள் எல்லாரும் சிரிச்சோம்.

முந்தாநாள், எங்க மம்மி ரூம் பேன், பேரிங் மாத்தறதுக்காக எலக்ட்ரீஷியன் கழட்டிட்டு போனார். அன்னிக்கு வீட்டுக்கு எங்க ஆபாமா(பாட்டி) வந்திருந்தாங்க. அப்ப, லாமின்,

‘ஆப்மா மேல பாருங்க’ என்றான்.

மேலே பார்த்தார். பேன் இல்லை, பேன் க்ளாம்ப் ஒரு ஓட்டையில் தெரிந்தது.

அதுக்கு அவன்,

‘ஆப்மா, அங்க ஓட்டை இருக்குல்ல, அங்க இருந்து தான் பேன் பிச்சாங்க’ என்று அப்பாவியாக சொல்கிறான்.

முருங்கைகாயையும் பேனை ஒப்பிட்டு பேசியது, எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பா இருந்தது.

-லாமின்.

11 comments:

Anonymous said...

//அங்க இருந்து தான் பேன் பிச்சாங்க’//

நீங்க எல்லாரும் சிரிச்சிருப்பீங்களே :) நானும் சிரிக்கறேன் பேன் பிச்சதுக்கு.

thiyaa said...

குட்டி பையன்களின் கதை
சுட்டித்தனமாக இருக்கிறது

நட்புடன் ஜமால் said...

இன்னும் இருக்குது மழலை

சிரிப்பாய் ...

இராஜகிரியார் said...

ஹா...ஹா...ஹா...

Unknown said...

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வந்து தொடருங்கள்.....http://eniniyaillam.blogspot.com/2009/09/blog-post.html

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஹா... ஹா... ஹா...

வாய் விட்டு சிரிச்சேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இந்த இடுகையை எழுதியது லாஃபிராதானே!
லாமின் என்று போட்டிருக்கிறாயே!

S.A. நவாஸுதீன் said...

மழலை மொழி அழகு

இப்னு அப்துல் ரஜாக் said...

அருமை,அருமை(சாலமன் பாப்பையா சொல்வது மாதிரி சொல்லுங்க)

peacetrain said...

happy eid

cheena (சீனா) said...

அன்பின் லாஃபிரா

பேனப் பிச்சிட்டாங்களா - ஓட்டை வுழுந்துடுச்சா - பாவம் லாமின் - ராத்ரி தூங்கறப்ப காத்து வேணுமே

ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் லாஃபிரா

Post a Comment

தமிழில் டைப் பண்ண, தங்கிலிஷில் அடியுங்க!