Lilypie

Lilypie

Wednesday, August 5, 2009

பூச்சிக்கடி வாங்கிட்டு போங்க

பூச்சிகளுக்கு பாஷை இருந்தால், அதுகளுக்குள் இப்படியெல்லாம் பேசிக்குமோ?!

கொசு இப்படி சொன்னது: நான் ஈ யோட கல்யாணத்துக்கு போக மாட்டேன், ஏனா எனக்கு இன்விடேஷனை ‘ஈ’மெயிலில் அனுப்பல.

பட்டாம்பூச்சி சோர்வாக வந்து உட்கார்ந்தது: அப்பா...Blog To Blog பறந்து பறந்து என் ரெக்கையே வலி எடுத்துக்கிச்சு.

மூட்டைபூச்சியின் அப்பா சம்பந்தியிடம் சொன்னது: கவலைப்படாதிங்க, என் பையன் மூட்டை தூக்கியாச்சும், உங்க பொண்ண கண்கலங்காம காப்பாத்துவான்.

கரப்பான்பூச்சி சட்டை காலரை தூக்கி விட்டுக்கிச்சு: ஆஹா...என் பேருல கூட பதிவர்கள் ஒரு விருது தர்ராங்களாம்.

(பூச்சிக்கடி வாங்கினவங்க, மறக்காம செப்டிக் ஊசி போட்டுக்கங்க!)

-லாஃபிரா.

11 comments:

சென்ஷி said...

ஆஹா.. பூச்சிக்கடியை விட உங்க கடி பயங்கரமா இருக்குதே :-))

//பட்டாம்பூச்சி சோர்வாக வந்து உட்கார்ந்தது: அப்பா...Blog To Blog பறந்து பறந்து என் ரெக்கையே வலி எடுத்துக்கிச்சு.

மூட்டைபூச்சியின் அப்பா சம்பந்தியிடம் சொன்னது: கவலைப்படாதிங்க, என் பையன் மூட்டை தூக்கியாச்சும், உங்க பொண்ண கண்கலங்காம காப்பாத்துவான்.//

இது ரெண்டும் சூப்பர் :)))))

ப்ரியமுடன் வசந்த் said...

குட்டீஸ் கலக்கல் கடிகள் தொடர்ந்து கலக்குங்க

நட்புடன் ஜமால் said...

[[கரப்பான்பூச்சி சட்டை காலரை தூக்கி விட்டுக்கிச்சு: ஆஹா...என் பேருல கூட பதிவர்கள் ஒரு விருது தர்ராங்களாம்.]]

இதெல்லாம தெரிஞ்சி வச்சிருக்கீங்க குட்டீஸ் ...

நட்புடன் ஜமால் said...

(பூச்சிக்கடி வாங்கினவங்க, மறக்காம செப்டிக் ஊசி போட்டுக்கங்க!)]]


ஹா ஹா ஹா

ஆபிரகாம் said...

கண்டிப்பா ஊசி போட்டுக்கிறம்!

துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை.

தொடர்ந்து கடிங்க.

Menaga Sathia said...

எல்லா கடியும் சூப்பர் குட்டீஸ்!!

Anonymous said...

Very nice

Lafira / Lamin said...

எல்லார்க்கும் தேங்க்ஸ்!

//[[கரப்பான்பூச்சி சட்டை காலரை தூக்கி விட்டுக்கிச்சு: ஆஹா...என் பேருல கூட பதிவர்கள் ஒரு விருது தர்ராங்களாம்.]]

இதெல்லாம தெரிஞ்சி வச்சிருக்கீங்க குட்டீஸ் //

எங்க மம்மி தான் ப்ளாக்ல நடக்கறது எல்லாம் (பறக்கறதும் தான்) வீட்டுல அப்படியே ஒப்பிக்கிறாங்களே?!

Jaleela Kamal said...

ஓஹோ இப்படி எல்லாம் கூட கடி இருக்கா?
ஒரே சிரிப்பு தான்

cheena (சீனா) said...

ஆகா ஆகா லாஃபிரா கடிக்க ஆரம்பிச்சாச்சா - ஊசி போட்டுக்க வேண்டியது தான்

நல்வாழ்த்துகள் அன்பின் லாஃபிரா

Post a Comment

தமிழில் டைப் பண்ண, தங்கிலிஷில் அடியுங்க!