
அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் வால்ட் டிஸ்னிக்கு சொந்தமாக ஒரு அலுவலகம் இருந்தது. அதன் அருகில் ஒரு தொட்டியில் இரண்டு எலி குட்டிகள் வசித்து வந்தன. வால்ட் டிஸ்னி சாப்பிட்டு போடும் மிச்சங்களுக்காக அவை எப்போதும் சண்டையிட்டு கொண்டே இருக்கும். இதை பார்ப்பதில் டிஸ்னிக்கு தனி குஷி!
அதில் பிரவுன் நிற குட்டி மீது டிஸ்னிக்கு ரொம்பவும் பாசம் அதிகம். அவற்றை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வசதியாக ஒரு கூண்டில் போட்டு வைத்தார். வெளியூர் செல்லும் போது பாதுகாப்பாக அவற்றை ஒரு இடத்தில் விட்டு விடுவார். ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, எலிகளை வரைந்து தன் மனைவியிடம் காட்டி, இதற்கு பெயர் மோள்டிமர் மவுஸ் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் மனைவி, மிக்கி மவுஸ் என்று வைத்தால், பொருத்தமாக இருக்கும் என்று கூறி உள்ளார்.
இப்படி உருவானது தான் மிக்கி மவுஸ். 1928ல் முதல் பிளேன் கிரேஸி என்ற முதல் மிக்கி மவுஸ் படம் வெளிவந்தது. அதில், மிக்கிக்கு குரல் கொடுத்தவரும் டிஸ்னி தான்.
-லாஃபிரா.