வானத்தினுள்ளே மின்னல் சென்றதால்
மின்சாரம் பாய்ந்தது வானத்திற்குள்,
இடியும் வந்து இடித்தது!
பாவம் தாங்க முடியவில்லை!!
மாமழையாய் அழுதது வானம்.
அருவியாய் கொட்டிய அம்மழைக்குள்,
மரங்கள் நடனம் ஆடியதை
வகுப்பறை ஜன்னலருகே கண்டேனே!!
-லாஃபிரா.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ஹாய் லாஃபிரா அப்போ வகுப்பில் பாடத்தை கவனிக்கலியா... ஹெ ஹெ சும்மா அருமையான கற்பனா சக்திமா உனக்கு நல்லாயிருந்தது....
ம்... அருமை.
மிகவும் அருமை....அம்மா 8 அடி பாய்ந்தால் பொண்ணு 32 அடியாக பாய்றிங்க....
சூப்பர் இருக்கு, கண்ணம்மா...
மாஷா அல்லாஹ்
அருமை.
லாஃபிரா வாழ்த்துக்கள்..
என்னையும் பள்ளிக்கூட நினைவுகளுக்கு அழைத்து போனது உனது கவிதை வரிகள்.
எடுத்ததும் கவிதை மழையா? விடாதா அடை மழை போல் விடாமல் பொழிந்து கொன்டே இருக்கட்டும் உங்கள் பதிவுகள். வாழ்த்துக்கள்
//ஹாய் லாஃபிரா அப்போ வகுப்பில் பாடத்தை கவனிக்கலியா... //
ஸ்கூல் பெல் அடிகர்கு 10 நிமிஷம் முன்னாடி மிஸ் வெளிய போய்ட்டாங்க . அப்ப தான் எழுதினேன்.
வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் தேங்க்ஸ்.
(கவிதை) மழையில்
நனைந்ததுபோல்
உணர்ந்தேனே!
நன்று!
அன்பின் லாஃபிரா
நல்ல சிந்தனையில் எழுந்த இயல்பான கவிதை - மின்சாரம் பாய்ந்து இடி இடித்து ஓ வென அழுத வானத்தின் கண்ணீரில் நடனம் புரியும் மரங்கள்
என்ன கற்பனை என்ன கற்ப்னை
நல்வாழ்த்துகள் லாஃபிரா
Post a Comment