என் உயிர் தோழி சுமார் 15 வருடம் கழித்து பிறந்த ஒரே செல்ல மகள். அப்பா செல்லம். நேற்று இரவு தூங்கிய அவளுடைய அப்பா, காலையில் கண் முழிக்கவே இல்லை. தட்டி எழுப்பின அவங்கம்மா, உண்மையை உணர்ந்து மகளைக் கூப்பிட, அவள் தந்தையின் உடல், சில்லென்று இருந்ததைப் பார்த்து, ‘அம்மா டாடி நம்மை விட்டு போய்விட்டார்’ என்று அழுதுகொண்டே சொல்லியிருக்கிறாள்.
எப்போ இறந்தார் என்றே யாருக்கும் தெரியாதபடி நடு ஜாமத்தில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. நான் சென்று பார்த்து, அவளுக்கு ஆறுதல் சொல்லி வந்தேன். அவள் அழுது கொண்டே இருப்பதைப் பார்க்க பாவமாக இருந்தது.
காலையில் பிறந்து
மாலையில் வாடும்
மலர்களைப் போல்
மலிவாகிவிட்டது மனித உயிர்!
பணமிருக்கு, புகழிருக்கு
சொத்திருக்கு, சுகமிருக்கு,
விடிந்து பார்த்தால் தந்தைக்கு,
உடலில் உயிரில்லை!!
பசிக்கும் போது சோறிருக்கு,
பாசம் காட்ட அப்பா இல்லை.
டாடி டாடி என்றழைக்க
அவளுக்கு இனி யாருமில்லை!!
ஆறுதல் சொல்ல
ஆளிருக்கு!
தேறுதல் கொள்ளுமா
அவள் மனது?
காலம் ஆற்றட்டும்
மன காயத்தை!
கவியாய் வடித்திட்டேன்,
என் சோகத்தை!!
-லாஃபிரா.
Friday, July 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
காலம் ஆற்றட்டும்
மன காயத்தை!
கவியாய் வடித்திட்டேன்,
என் சோகத்தை!!]]
மிக அற்புதம்.
நல்லபடியாக வார்த்தைகளை கோர்த்து இருக்கீங்க.
வாழ்த்துகள் குழந்தைகளே.
"அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்கும் ஓடிவிடும்"
-என்று 'வல்லவனுக்கு வல்லவன்'
பாடலை (ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன்)
நினைவுப்படுத்தியது,
லாஃபிராவின்,
'காலையில் பிறந்து
மாலையில் வாடும்
மலர்களைப் போல்'
என்ற வரிகள்.
அருமை!
Arumai.... Mika Mika Arumai... saralamana eluthu nadai... rasikkum padi ullathu.... vaalthukkal.... Thatchai Kannan
எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ்ங்க
நன்றாக உள்ளது. குட்டீஸ்களுக்கு நல்ல விருந்து.
அன்பின் லாஃபிரா
தோழியின் சோகத்தைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல குணம் வாழ்க - வாழ்வில் முன்னேற இக்குணம் ஒரு மைல் கல்
நல்வாழ்த்துகள் லாஃபிரா
Post a Comment